BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் மாவட்ட செயலகம் அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் மாவட்ட செயலகம் அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை இன்று (05.03.2026) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 36 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும், மேலும் 19 நிலையங்களில் மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி எம். குணரத்தினம் பரமேஸ்வரா சந்தி, எஸ். தர்மவரதன் மருதனார்மடம், பலநோக்கு கூட்டுறவு சங்கம் பண்டத்தரிப்பு, கே. தேவகுருநாதன் கலிவியங்காடு, சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவு சங்கம், மல்லாகம் பலநோக்கு கூட்டுறவு சங்கம், யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவு சங்கம், தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் வழங்கப்படவுள்ளது.

அதேவேளை மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள 19 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மண்ணெண்ணெய் விநியோகமும் இடம்பெறவுள்ளதாக மாவட்ட செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"