BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று தொடக்கம்

ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று தொடக்கம்

நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்குமான 2026ஆம் ஆண்டின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று (03) ஆரம்பமாகின்றதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

இந்நிலையில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைகள் மீண்டும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, ஏப்ரல் 20ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைபெற்றது. பரீட்சையை முன்னிட்டு பெப்ரவரி 14ஆம் திகதி முதல் மார்ச் 2ஆம் திகதி வரை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

அந்த விடுமுறை காலத்திற்குப் பின்னர் கற்றல் நடவடிக்கைகளைத் தொடரும் வகையில் பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"