BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சவுதாம்டன் பாலியல் சீண்டல் விவகாரம்: வயது இலங்கை இளைஞன் மீது வழக்குப் பதிவு!

சவுதாம்டன் பாலியல் சீண்டல் விவகாரம்: வயது இலங்கை இளைஞன் மீது வழக்குப் பதிவு!

கடந்த பெப்ரவரி 5-ஆம் திகதி சவுதாம்டன் நகரின் போலிகோன் (Polygon) பகுதியில் வைத்து 19 வயது யுவதி ஒருவருக்குப் போதைப்பொருள் வழங்கப்பட்டு, அவர் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து சவுதாம்டன் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 21 வயதான வியான் சுரேந்திரநாதன் (Viyan Surendranathan) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பின்வரும் பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:


இளம்பெண்ணைத் தகாத முறையில் கையாண்டமை.

பாலியல் சீண்டல் செய்யும் நோக்கத்தில், அந்தப் பெண்ணின் உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்து அவரை நிலைதடுமாற வைக்க மயக்க மருந்து அல்லது போதைப்பொருள் வழங்கியமை.

மிக அபாயகரமான 'Class A' வகையைச் சேர்ந்த போதைப்பொருட்களைத் தன்னிடம் வைத்திருந்தமை.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் புலம்பெயர் மக்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியச் சட்டங்களின்படி, குறிப்பாக 'Class A' ரக போதைப்பொருள் பாவனை மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"