BREAKING
புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம் புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம்

ஆஷகள் ஆயிரம்: அப்பா - மகன் மோதலில் ஜெயித்ததா இந்த ஃபீல் குட் டிராமா?

ஆஷகள் ஆயிரம்: அப்பா - மகன் மோதலில் ஜெயித்ததா இந்த ஃபீல் குட் டிராமா?

25 ஆண்டுகால அனுபவம் கொண்ட மெடிக்கல் ரெப் ஹரிஹரன் (ஜெயராம்). அவரது மகன் அஜீஷ் (காளிதாஸ்), சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற லட்சியத்துடன் சுற்றும் இளைஞன். வருமானம் இல்லாத மகனால் ஏற்படும் செலவுகள் மற்றும் குடும்பச் சூழலால் தந்தை-மகன் இடையே விரிசல் உண்டாகிறது.

ஒரு சூழலில், ஒரு படப்பிடிப்புத் தளத்தில் புகழ்பெற்ற நடிகர் சுமித் ராகவனுக்கு (ஷரப் உதீன்) முன்னால் தற்செயலாக நடித்துக் காட்டும் வாய்ப்பு ஹரிஹரனுக்கு கிடைக்கிறது. அந்த வீடியோ வைரலாக, அதன்பின் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் அதிரடி மாற்றங்களே படத்தின் மீதிக்கதை.


நடிப்பு எப்படி?

படத்தின் அச்சாணியே இவர்தான். காமெடி காட்சிகளில் வழக்கம் போல அசத்தும் ஜெயராம், இதில் எமோஷனல் காட்சிகளிலும் சிக்ஸர் அடித்துள்ளார். குறிப்பாக, சவால் விடும் இடங்களிலும், ஏமாற்றத்தைச் சந்திக்கும் இடங்களிலும் தனது அனுபவ நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்.

ஒரு துடிப்பான இளைஞனாக, தன் அப்பாவிற்குத் தன்னை நிரூபிக்கப் போராடும் மகனாக யதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளார். கிளைமேக்ஸ் காட்சியில் அவர் உடைந்து அழும் இடம் எமோஷனல் டச்.

ஷரப் உதீன் வரும் காட்சிகள் மிரட்டல். ஆஷா ஷரத், கணவன் - மகன் இருவருக்கும் இடையே தவிக்கும் ஒரு சராசரி தாயின் உணர்வுகளைக் கச்சிதமாகப் பிரதிபலித்துள்ளார்.

இயக்கம் மற்றும் தொழில்நுட்பம்:
இயக்குநர் ஜி.ப்ரஜித், ஒரு மெல்லிய தந்தை-மகன் உறவைச் சுவாரசியமாகச் சொல்ல முயன்றுள்ளார்.

ஜூட் ஆந்தணி ஜோஸப் மற்றும் அரவிந்த் ராஜேந்திரனின் வசனங்கள் நகைச்சுவை கலந்த நேர்த்தியுடன் உள்ளன.

சனல் தேவின் பின்னணி இசை மற்றும் ஸ்வரூப் பிலிப்பின் ஒளிப்பதிவு படத்திற்குப் பலம் சேர்க்கின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"