BREAKING
மாவீரர் துயிலுமில்லங்களில் கண்ணீருடன் குவிந்த உறவுகள்; தாயகம் எங்கும் சோகம் இலங்கையின் கடன் தரப்படுத்தல் 'CCC+/C' இலிருந்து 'B-/B' ஆக உயர்த்தப்பட்டது இலங்கை வந்த 03 இளம் வர்த்தகர்கள் அதிரடி கைது லலித் – குகன் வழக்கு ; காணோளி மூலம் கோட்டபாய சாட்சியம் ; யாழ் டனீதிம்ன்றின் உத்தரவு செம்மணி புதைகுழி அறிக்கையில் உண்மைகள் மறைப்பு! மாவீரர் துயிலுமில்லங்களில் கண்ணீருடன் குவிந்த உறவுகள்; தாயகம் எங்கும் சோகம் இலங்கையின் கடன் தரப்படுத்தல் 'CCC+/C' இலிருந்து 'B-/B' ஆக உயர்த்தப்பட்டது இலங்கை வந்த 03 இளம் வர்த்தகர்கள் அதிரடி கைது லலித் – குகன் வழக்கு ; காணோளி மூலம் கோட்டபாய சாட்சியம் ; யாழ் டனீதிம்ன்றின் உத்தரவு செம்மணி புதைகுழி அறிக்கையில் உண்மைகள் மறைப்பு!

நண்பியுடன் சென்ற இளம்பெண் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்; சாரதிகள் கைது

நண்பியுடன் சென்ற இளம்பெண் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்; சாரதிகள் கைது

 ராஜகிரியவிலிருந்து பெலவத்தையை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்த் திசையில் வந்த இரண்டு வாகனங்களுடன் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதி ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றைய யுவதி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 24ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே நாடாளுமன்ற மைதானத்திற்கு முன்னால் உள்ள வீதியில், விபத்து நிகழ்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த 26 வயது மெத்மி கவிந்தி வீரசிங்க, கொஸ்வத்த பிராந்திய மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிய மற்றைய இளம் பெண் பலத்த காயங்களுடன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்மந்தப்பட்ட வாகனங்களின் சாரதிகளைத் தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"