BREAKING
திருமண உறவுக்குள் பாலியல் அத்துமீறல் ; 36 நாடுகளில் பெண்களுக்குப் சட்டப் பாதுகாப்பு இல்லை செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் மிரட்டல்; சம்பவத்தால் பரபரப்பு மறைந்த எம்.கே. சிவாஜிலிங்கம் நினைவேந்தல் நடத்திய இடங்களிலும் அஞ்சலி மாவீரர் தின நினைவேந்தலுக்குத் தயாராகும் பல்கலைக்கழகம் அவுஸ்திரேலிய தீவில் சிக்கிய இலங்கைப் பெண்ணை மீட்க நடவடிக்கை திருமண உறவுக்குள் பாலியல் அத்துமீறல் ; 36 நாடுகளில் பெண்களுக்குப் சட்டப் பாதுகாப்பு இல்லை செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் மிரட்டல்; சம்பவத்தால் பரபரப்பு மறைந்த எம்.கே. சிவாஜிலிங்கம் நினைவேந்தல் நடத்திய இடங்களிலும் அஞ்சலி மாவீரர் தின நினைவேந்தலுக்குத் தயாராகும் பல்கலைக்கழகம் அவுஸ்திரேலிய தீவில் சிக்கிய இலங்கைப் பெண்ணை மீட்க நடவடிக்கை

அவுஸ்திரேலிய தீவில் சிக்கிய இலங்கைப் பெண்ணை மீட்க நடவடிக்கை

அவுஸ்திரேலிய தீவில் சிக்கிய இலங்கைப் பெண்ணை மீட்க நடவடிக்கை

குக் தீவுகளில் (Cook Islands) சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணான ருச்சிரா செவ்வந்தி ரணசிங்கவை பாதுகாப்பாக மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக நியூசிலாந்து அரசாங்கத்தின் தலையீடு கோரப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அவரது பாதுகாப்பான மற்றும் சுயவிருப்பத்தின் பேரிலான வருகைக்கு விசேட மனிதாபிமான அடிப்படையில் கவனம் செலுத்துமாறு கோரி, நியூசிலாந்தின் குடிவரவு விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கமரூன் ப்ரூருக்கு (Cameron Brewer) உத்தியோகபூர்வமாகக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இந்தச் சம்பவம் ஆரம்பமானது முதல் தீவிரமாகத் தலையிட்டுச் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நியூசிலாந்தின் குடிவரவுச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு முழுமையான மதிப்பளித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இராஜதந்திர உறவுகளின் ஊடாக இப்பிரச்சினைக்கு நடைமுறைச் சாத்தியமான மற்றும் மனிதாபிமானத் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளின் நலன் மற்றும் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், ருச்சிரா செவ்வந்தி ரணசிங்கவை பாதுகாப்பாக மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்குப் பொருத்தமான இராஜதந்திர மற்றும் தூதரக நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"