BREAKING
முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு; மகிழ்ச்சியில் ஆண்கள்! நெடுந்தீவில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம்; பெரும் மகிழ்ச்சியில் மக்கள்! மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி வாரிசுக்கும் FCID அழைப்பு அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு நடவடிக்கையிலிருந்து இலங்கைக்கு விலக்கு மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை தலைவர் இராஜினாமா முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு; மகிழ்ச்சியில் ஆண்கள்! நெடுந்தீவில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம்; பெரும் மகிழ்ச்சியில் மக்கள்! மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி வாரிசுக்கும் FCID அழைப்பு அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு நடவடிக்கையிலிருந்து இலங்கைக்கு விலக்கு மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை தலைவர் இராஜினாமா

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு நடவடிக்கையிலிருந்து இலங்கைக்கு விலக்கு

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு நடவடிக்கையிலிருந்து இலங்கைக்கு விலக்கு

14 பொருளாதார நாடுகளின் வர்த்தக நடைமுறைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையினால் இந்தப் புதிய வரி நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, அமெரிக்காவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளில் சில நாடுகள் 20 சதவீதம் முதல் அதிகபட்சமாக 40 சதவீதம் வரையிலான வரி விதிப்புகளை எதிர்கொள்ளவுள்ளன.

இந்த நடவடிக்கையின் கீழ் சீனாவுக்கு அதிகபட்சமாக 40 சதவீதம் வரையிலான வரியும், வியட்நாமுக்கு 35 சதவீதம் வரையிலான வரியும் விதிக்கப்படவுள்ளன.

ஏனைய பாதிக்கப்பட்ட நாடுகள் 20 அல்லது 25 சதவீத வரி விகிதங்களை எதிர்கொள்கின்றன.

எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இணக்கம் தெரிவித்துள்ள வரி உச்சவரம்புகள் காரணமாக, சில நாடுகளுக்கான நடைமுறை வரி விகிதங்கள் குறைவாக அமையக்கூடும்.

சீனா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, தென் கொரியா, வியட்நாம், தாய்வான், பங்களாதேஷ் மற்றும் ஜப்பான் ஆகிய 14 பொருளாதாரங்களே இந்த விசாரணைகளில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

எனினும், இந்தப் பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னர் அறிவித்திருந்த ‘விடுதலை நாள்’ (Liberation Day) வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அவரது நிர்வாகம் மாற்று வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அதன் ஒரு பகுதியாகவே இந்தப் புதிய வரி நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அரசாங்கங்களின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் அமெரிக்க வணிகங்கள், தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு நியாயமற்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனவா என்பதை ஆராயும் அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் 301ஆவது பிரிவின் கீழ், கடந்த மார்ச் மாதம் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வரி விதிப்புகள் உதவும் என ட்ரம்ப் நிர்வாகம் வாதிட்டு வருகின்றது.

இதனால், வரிகள் அவரது வர்த்தகக் கொள்கையின் முக்கிய அம்சமாகத் தொடர்கின்றன. எனினும், இறக்குமதி வரிகள் நுகர்வோர் பொருட்களின் விலைகளை அதிகரிக்கச் செய்வதுடன், பணவீக்கத்தைத் தூண்டி, உலகளாவிய வர்த்தகத்தில் கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"