BREAKING
பிரிட்டனால் ஆபிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி உயிர் மாய்ப்பு! பேருந்துடன் கார் மோதி பெண் வைத்தியசாலையில் செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய டெலிவரி ஊழியர்; சினிமாவை மிஞ்சிய சம்பவம் நாமல் பிணை சீராய்வு மனு ஒத்திவைப்பு பிரான்ஸில் இலங்கை தமிழ் யுவதிக்கு நேர்ந்த பெரும் சோகம் ; கதறும் உறவுகள் பிரிட்டனால் ஆபிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி உயிர் மாய்ப்பு! பேருந்துடன் கார் மோதி பெண் வைத்தியசாலையில் செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய டெலிவரி ஊழியர்; சினிமாவை மிஞ்சிய சம்பவம் நாமல் பிணை சீராய்வு மனு ஒத்திவைப்பு பிரான்ஸில் இலங்கை தமிழ் யுவதிக்கு நேர்ந்த பெரும் சோகம் ; கதறும் உறவுகள்

செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய டெலிவரி ஊழியர்; சினிமாவை மிஞ்சிய சம்பவம்

செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய டெலிவரி ஊழியர்; சினிமாவை மிஞ்சிய சம்பவம்

சென்னையில் ரேபிடோ இருசக்கர வாகன டெலிவரி மூலம் அனுப்பப்பட்ட பார்சலில் இருந்த 2 விலை உயர்ந்த செல்போன்களை திருடிவிட்டு, அதற்கு பதிலாக ஸ்வீட்ஸ் பாக்ஸை வைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட டெலிவரி ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, சென்னை மண்ணடி, சைவ முத்தையா தெருவை சேர்ந்தவர் சையத் அப்ரிடி (28). இவர் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார்.

கடந்த 6-ம் தேதி மாலை, இவரது நண்பர் நுங்கம்பாக்கத்தில் இருந்து 2 செல்போன்களை ரேபிடோ இருசக்கர வாகன டெலிவரி மூலம் பார்சலில் அனுப்பி வைத்தார்.

அந்த பார்சலை பெற்றுக்கொண்ட சையத் அப்ரிடி, திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அதில் 2 செல்போன்களுக்கு பதிலாக ஸ்வீட்ஸ் பாக்ஸ் வைக்கப்பட்டிருந்தது.

இதனால் டெலிவரி ஊழியரே செல்போன்களை திருடிவிட்டு, ஸ்வீட் பாக்ஸை வைத்து ஏமாற்றியதாக சந்தேகித்த சையத் அப்ரிடி, இதுகுறித்து பொலிஸில் முறைப்பாடு அளித்தார்.

பொலிஸாரின் விசாரணையில், , செல்போன்களை திருடியது டெலிவரி ஊழியரான வியாசர்பாடியை சேர்ந்த மனிஷ்குமார் (19) என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து சாம்சங் மற்றும் கூகுள் பிக்சல் என 2 செல்போன்களையும் மீட்டனர்.

சம்பவத்தன்று நுங்கம்பாக்கத்தில் இருந்து பார்சலை பெற்றுக்கொண்டு திரு.வி.க. நகர் நோக்கி வந்தபோது, அகரம் சந்திப்பு அருகே பார்சலை பிரித்து அதிலிருந்த 2 செல்போன்களையும் திருடிவிட்டு, அவற்றுக்கு பதிலாக இனிப்பு பெட்டியை வைத்தமை தெரியவந்தது. சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"