இலங்கை மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட, ஜிம்பாப்வேயின் முக்கிய மத போதகர் யூபர்ட் ஏஞ்சல், பாலியல் வன்கொடுமை மற்றும் ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வேயின் முக்கிய மத போதகரும், 'ஸ்பிரிட் எம்பஸி' (Spirit Embassy) நிறுவனருமான யூபர்ட் ஏஞ்சல் , பாலியல் வன்கொடுமை மற்றும் ஓரினச்சேர்க்கை (Sodomy/Homosexuality) தொடர்பான குற்றச்சாட்டுகளில் கைதாகியுள்ளார்.
போதகரால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை; இந்தக் குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. அதேவேளை சர்ச்சைக்குரிய இலங்கை மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு இவர் மிக நெருக்கமானவர்.
மேலும், ஜெரோம் பெர்னாண்டோவின் மகளுக்கும், யூபர்ட் ஏஞ்சலின் மகனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபசவுடன் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் கைதான ஜிம்பாப்வே போதகரின் புகைபடமும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக