BREAKING
இலங்கை சாரதிகளுக்கு வெளியான முக்கிய தகவல் குடும்ப நிகழ்விற்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம் ; கதறும் உறவுகள் கிளிநொச்சி பெண் கூட்டு பாலியல் வன்புனர்வு; சபையில் சிறீதரன் எம்.பி. கடும் சினம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! யாழில் அதிரடி கைதான வர்த்தகர் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை இலங்கை சாரதிகளுக்கு வெளியான முக்கிய தகவல் குடும்ப நிகழ்விற்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம் ; கதறும் உறவுகள் கிளிநொச்சி பெண் கூட்டு பாலியல் வன்புனர்வு; சபையில் சிறீதரன் எம்.பி. கடும் சினம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! யாழில் அதிரடி கைதான வர்த்தகர் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை

இலங்கை சாரதிகளுக்கு வெளியான முக்கிய தகவல்

இலங்கை சாரதிகளுக்கு வெளியான முக்கிய தகவல்

வாகன இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிப்பதில் நிலவும் தாமதங்களை 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையில் நடைபெற்ற உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக திணைக்களம் வழங்கியுள்ள கால அவகாசம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முந்தைய குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட காலக்கெடுவுடன் ஒப்பிடுகையில், இம்முறை மேலும் நீண்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த திணைக்கள அதிகாரிகள், ஏற்கனவே 2027 ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்ப்பதாக அறிவித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, தற்போது விநியோகிக்கப்படாமல் எஞ்சியுள்ள அனைத்து வாகன இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களையும் 2027 ஆகஸ்ட் மாதத்திற்குள் விநியோகித்து முடிக்க எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"