BREAKING
வவுனியாவில் மகனுடன் சென்று மாயமான தாய் ; உதவி கோரும் பொலிஸார் ஜானகி சிறிவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்தவர் திடீர் உயிரிழப்பு இரகசியமாக மாணிக்கக்கல்லை விழுங்கிய நபருக்கு அடுத்தடுத்து நடந்த சம்பவம் அதிகாலையில் குடும்பத்தை காவு கொண்ட தீ விபத்து ; பிரேதப் பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல் வவுனியாவில் மகனுடன் சென்று மாயமான தாய் ; உதவி கோரும் பொலிஸார் ஜானகி சிறிவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்தவர் திடீர் உயிரிழப்பு இரகசியமாக மாணிக்கக்கல்லை விழுங்கிய நபருக்கு அடுத்தடுத்து நடந்த சம்பவம் அதிகாலையில் குடும்பத்தை காவு கொண்ட தீ விபத்து ; பிரேதப் பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையின் பிரபல இசைக்கலைஞரின் இளைய சகோதரர் சடலமாக மீட்பு

இலங்கையின் பிரபல இசைக்கலைஞரின் இளைய சகோதரர் சடலமாக மீட்பு

பிரபல இசைக்கலைஞர் விக்டர் ரத்நாயக்கவின் இளைய சகோதரர், அதுருகிரிய – பொரலுகொட பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி மீட்கப்பட்ட குறித்த சடலம், 65 வயதுடைய ரத்நாயக்க ஆராச்சிலாகே டொன் பிரேமன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொழில்முறையில் ஒளிப்பதிவாளரான இவர், குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த 18ஆம் திகதி பிற்பகல், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்ட பொலிஸார் வீட்டிற்குள் அவரது சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.

சடலம் மீட்கப்படுவதற்கு சுமார் இரண்டு நாட்களுக்கு முன்னரே அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எனினும், உயிரிழப்புக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"