சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 20) சில்லரை விற்பனைச் சந்தையில் மீண்டும் அதிரடியாக குறைந்து நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.470 குறைந்து ரூ.11,510 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.3,760 குறைந்து ரூ.92,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 11 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு சுமார் ரூ.14,000 வரை சரிந்துள்ளது.
11 மாதங்களுக்குப் பிறகு கடந்த நவம்பர் 17-ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்திற்குக் கீழ் (ரூ.99,760) இறங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்றும் இன்றும் தங்கம் விலை கணிசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
குறிப்பாக, நேற்றைய வர்த்தக முடிவில் சவரன் ரூ.95,840-க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.3,760 சரிந்து ரூ.92,080 என்ற நிலையை எட்டியுள்ளது.
அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலையும் கணிசமாகக் குறைந்து, ஒரு கிராம் ரூ.12,556 என்ற அளவிலும், ஒரு சவரன் ரூ.1,00,448 என்ற அளவிலும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.9,417 ஆகவும், ஒரு சவரன் ரூ.75,336 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.180 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.1,80,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த நவம்பர் 11-ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளி ரூ.2,00,000-க்கு விற்பனையான நிலையில், கடந்த 10 நாட்களில் கிலோவுக்கு ரூ.20,000 வரை சரிந்துள்ளது.
தொடர் விலை வீழ்ச்சி காரணமாக, திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கக் காத்திருக்கும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று (20) 7,000 ரூபாயினால் குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு செட்டியார்த் தெருவின் இன்று (20) முற்பகல் 10.00 மணிக்குப் வௌியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 345,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 317,400 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 352,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 323,800 ரூபாயாகவும் காணப்பட்டது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை வீழ்ச்சியானது தங்க ஆபரண கொள்வனவில் ஈடுபடுவோருக்கு பாரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக