BREAKING
நீதிமன்றில் முன்னிலையாக சென்றவர் மீது வாள்வெட்டு தாக்குதல் ; யாழில் அரங்கேறிய சம்பவம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு விபத்தில் சிக்கி கால்களை இழக்கவிருந்த 8 வயது சிறுமி; இலங்கை மருத்துவர் சாதனை! யாழ் வீதிகளில் இப்படியும் சம்பவங்கள் ; மிகுந்த அவதானம் மக்களே ; ஆளுநரின் முக்கிய தகவல் Instagram Subscription மூலம் மாதம் ரூ.85 லட்சம் வருமானம் பெறும் யுவதி! நீதிமன்றில் முன்னிலையாக சென்றவர் மீது வாள்வெட்டு தாக்குதல் ; யாழில் அரங்கேறிய சம்பவம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு விபத்தில் சிக்கி கால்களை இழக்கவிருந்த 8 வயது சிறுமி; இலங்கை மருத்துவர் சாதனை! யாழ் வீதிகளில் இப்படியும் சம்பவங்கள் ; மிகுந்த அவதானம் மக்களே ; ஆளுநரின் முக்கிய தகவல் Instagram Subscription மூலம் மாதம் ரூ.85 லட்சம் வருமானம் பெறும் யுவதி!

விபத்தில் சிக்கி கால்களை இழக்கவிருந்த வயது சிறுமி; இலங்கை மருத்துவர் சாதனை!

விபத்தில் சிக்கி கால்களை இழக்கவிருந்த வயது சிறுமி; இலங்கை மருத்துவர் சாதனை!

காலி (Galle) கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் (Karapitiya Teaching Hospital) பிரதிபலிப்பு/புனர்வாழ்வு சத்திரசிகிச்சை நிபுணர் (Consultant Reconstructive & Plastic Surgeon) வைத்தியர் ரஞ்சுக உபசிறி (Dr. Ranjuka Ubesiri) மற்றும் அவரது மருத்துவக் குழுவினர், விபத்தில் சிக்கித் துண்டிக்கப்படும் நிலையில் இருந்த 8 வயதுச் சிறுமியின் கால்களை வெற்றிகரமான சத்திரசிகிச்சை மூலம் காப்பாற்றிச் சாதனை படைத்துள்ளனர்.

விபத்து ஒன்றில் படுகாயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கால்களை உடனடியாக அகற்ற வேண்டும் என ஆரம்பகட்ட மருத்துவப் பரிசோதனைகளில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தலையிட்ட வைத்தியர் ரஞ்சுக, சிறுமியின் கால்களை அகற்றத் தேவையில்லை எனவும், தானே அவரது கால்களைப் பாதுகாத்துக் குணப்படுத்திச் சாதாரண வாழ்க்கையை மீட்டுத் தருவதாகவும் உறுதியளித்தார்.

அதற்கமைய, தனது மருத்துவ நிபுணத்துவத்தாலும் அர்ப்பணிப்பாலும் அந்தச் சிறுமியின் கால்களை வெற்றிகரமாகக் காப்பாற்றி, சிறுமிக்குப் புதிய வாழ்க்கையைப் பரிசளித்துள்ளார்.

வைத்தியர் ரஞ்சுக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளிகளுக்காக 150-க்கும் மேற்பட்ட வெற்றிகரமான அறுவை சிகிச்சைகளை இவர் மேற்கொண்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது 5 முதல் 6 மணி நேரங்களுக்கும் மேலாக நீடிக்கக்கூடிய மிகவும் சவாலான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகளைக் கூடத் தனது மிகுந்த பொறுமையாலும் திறமையாலும் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார்.

இன்னிலையில் மருந்த்துவர் ரஞ்சுகவுக்கு பலரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"