ஈஸ்டர் பயங்கரவாதத் குண்டுத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என எங்களுக்குத் நன்கு தெரியும் என்றும், எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்திருத்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
ஈஸ்டர் பயங்கரவாதத் குண்டுத் தாக்குதல் தொடர்பில் எதிர்க்கட்சியினர் தெரிவிக்கும் தவறான கூற்றுக்களை அரசாங்கம் நிராகரிப்பதாகவும் அங்கு சுட்டிக்காட்டினார்.
ஈஸ்டர் பயங்கரவாதத் குண்டுத் தாக்குதல் தொடர்பில் எவரும் பொய்யான கருத்துக்களை சொல்லக் கூடாது. இதன் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது குறித்து எமக்குத் தெளிவான புரிதல் உள்ளது.
உதய கம்மன்பில ஈஸ்டர் பயங்கரவாதத் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் தொடர்பான நூலொன்றை வெளியிட்ட நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் அதில் கலந்துகொண்டு அக்கருத்துக்களை ஏற்றுக்கொண்டு உறுதிப்படுத்தினர்.
எதிர்க்கட்சியினர் இது தொடர்பில் பொதுமக்களைத் தவறாக வழிநடத்த முயற்சித்தாலும் உண்மையை மறைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
உள்ளூராட்சித் துறையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் ஊழியர் நலன்புரி நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த அமைச்சர், இளைஞர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துச் செயற்படுவதாகவும் அதற்கமைய இரண்டாவது பட்டியலில் 5600 இளைஞர், யுவதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன கூறினார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக