BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வடக்கு மாகாண ஆளுநருக்கும் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதிக்கும் விசேட சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநருக்கும் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதிக்கும் விசேட சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி. சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (03.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி. சில்வா, வடக்கு மாகாண ஆளுநரை இன்று சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பாகவும், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட காணி விடுவிப்புக்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேவேளை, பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் மற்றும் அதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் தரப்பினரால் நிர்வகிக்கப்படும் வர்த்தக நிலையங்கள் தொடர்பாகவும் ஆளுநரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், கடந்த காலங்களில் பாதுகாப்புத் தரப்பினர் வழங்கிய ஒத்துழைப்புக்கள் குறித்தும் இரு

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"