BREAKING
தமிழக அரசியலில் பரபரப்பு ; ஆதவ் அர்ஜுனாவை விவாகரத்து செய்வதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு மீண்டும் அழைக்கப்பட்ட விமல் வீரவங்ச கந்த சஷ்டி விரத நாளில் பக்தர்களை வியப்பில் ஆழ்த்திய மயில் தாயின் கருப்பையில் 25 வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை ; சாதனை படைத்த இந்திய மருத்துவர்கள் கிளிநொச்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட யுவதி ; போராட்டத்தில் குதித்த மக்கள் தமிழக அரசியலில் பரபரப்பு ; ஆதவ் அர்ஜுனாவை விவாகரத்து செய்வதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு மீண்டும் அழைக்கப்பட்ட விமல் வீரவங்ச கந்த சஷ்டி விரத நாளில் பக்தர்களை வியப்பில் ஆழ்த்திய மயில் தாயின் கருப்பையில் 25 வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை ; சாதனை படைத்த இந்திய மருத்துவர்கள் கிளிநொச்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட யுவதி ; போராட்டத்தில் குதித்த மக்கள்

தாயின் கருப்பையில் வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை ; சாதனை படைத்த இந்திய மருத்துவர்கள்

தாயின் கருப்பையில் வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை ; சாதனை படைத்த இந்திய மருத்துவர்கள்

இந்தியாவின் மருத்துவத்துறையில் முக்கிய மைல்கல்லாக, புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) மருத்துவர்கள், தாயின் கருப்பையில் 25 வார வளர்ச்சியடைந்த சிசுவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் ஆறு மணிநேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில், குழந்தையின் முதுகுத்தண்டில் காணப்பட்ட கடுமையான பிறவிக் குறைபாடு சீரமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

குழந்தையின் முதுகுத்தண்டில் ஏற்பட்டிருந்த இந்தக் குறைபாடு, எதிர்காலத்தில் பக்கவாதம் உள்ளிட்ட நரம்பியல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.

பொதுவாக குழந்தை பிறந்த பின்னரே இத்தகைய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், கருப்பையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளமை இந்திய மருத்துவ வரலாற்றில் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.

அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து தாயும் சிசுவும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சிகிச்சை குணப்படுத்துவதற்கான முழுமையான உத்தரவாதம் அல்ல என்றாலும், குழந்தைக்கு ஏற்படக்கூடிய மேலதிக பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"