BREAKING
ஓரினச்சேர்க்கை ,பாலியல் வன்கொடுமை குற்றத்தில் மத போதகர் கைது! நள்ளிரவில் மருத்துவர் வேனை சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி! மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு; மக்கள் திண்டாட்டம் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை கிளிநொச்சியில் மீன்கள் உயிரிழப்பு; விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு ஓரினச்சேர்க்கை ,பாலியல் வன்கொடுமை குற்றத்தில் மத போதகர் கைது! நள்ளிரவில் மருத்துவர் வேனை சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி! மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு; மக்கள் திண்டாட்டம் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை கிளிநொச்சியில் மீன்கள் உயிரிழப்பு; விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு

கல்முனையில் மூன்று பிள்ளைகளின் தாய் நாட்களாகக் காணவில்லை

கல்முனையில் மூன்று பிள்ளைகளின் தாய் நாட்களாகக் காணவில்லை

கல்முனையில் மூன்று பிள்ளைகளின் தாய் 5 நாட்களாகக் காணவில்லை என தெரிவித்துள்ளனர். 

 கல்முனையிலிருந்து யாழ்ப்பாணம் - நெல்லியடிப் பகுதிக்குச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் தகவல் அறிந்தோர் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு குடும்பத்தினர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம், கல்முனைப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கடந்த 5 நாட்களாகக் காணாமல் போயுள்ளதாகக் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் அவரது கணவரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெயர்: சுப்ரமணியம் கற்பகக்கரசு

முகவரி: இல. 29/2, கடற்கரை வீதி, கல்முனை – 2A

கல்முனையிலுள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிய இவர், இதுவரை வீடு திரும்பாத நிலையில் யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதிக்குச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கணவரினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய கல்முனை தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மூன்று சிறு பிள்ளைகளின் தாயான இவரைப் பற்றிய ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாகக் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவித்து உதவுமாறு குடும்பத்தினர் பொதுமக்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்பு இலக்கங்கள்: 071 419 6223 / 074 278 1199

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"