BREAKING
புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம் புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம்

உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை கேத்தரின் ஓஹாரா காலமானார் ரசிகர்கள் அதிர்ச்சி

உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை கேத்தரின் ஓஹாரா காலமானார் ரசிகர்கள் அதிர்ச்சி

ஹாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த கேத்தரின் ஓ’ஹாரா (Catherine O'Hara) காலமானார். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது இல்லத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மரணமடைந்த போது அவருக்கு வயது 71.

1980ஆம் ஆண்டு வெளியான Nothing Personal திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமான கேத்தரின் ஓ’ஹாரா, அதன் பின்னர் பல பிரபல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக Home Alone, Beetlejuice போன்ற சூப்பர்ஹிட் படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும், உலகளவில் பெரும் ரசிகர்களைக் கொண்ட Schitt's Creek என்ற பிரபல வெப் தொடரிலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது இயல்பான நடிப்பும் நகைச்சுவை கலந்த நடையும்தான் அவரை தனித்துவமான நடிகையாக மாற்றியது.

தனிப்பட்ட வாழ்க்கையில், கடந்த 1992ஆம் ஆண்டு போ வெல்ச் (Bo Welch) என்பவரை திருமணம் செய்துகொண்ட கேத்தரின் ஓ’ஹாராவுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், அவரது திடீர் மரணம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது இரங்கல்களையும் நினைவஞ்சலிகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

கேத்தரின் ஓ’ஹாராவின் மரணத்திற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"