BREAKING
சனிபகவானின் ஆசியால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவங்கதான் யாழில் தீவிர சிகிச்சையிலிருக்கும் சிவாஜிலிங்கத்தின் மனைவியிடம் தீவிர விசாரணை ; எழுந்துள்ள கண்டனம் தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் அம்பலமான இளைஞனின் தகாத செயல் திருகோணமலையில் தரைமட்டமாக்கப்பட்ட 3 வீடுகள் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை அதிகாலை விமான நிலையத்தை பரபரபாக்கிய பெண் ; ஆடைக்குள் காத்திருந்த ஷாக் சனிபகவானின் ஆசியால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவங்கதான் யாழில் தீவிர சிகிச்சையிலிருக்கும் சிவாஜிலிங்கத்தின் மனைவியிடம் தீவிர விசாரணை ; எழுந்துள்ள கண்டனம் தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் அம்பலமான இளைஞனின் தகாத செயல் திருகோணமலையில் தரைமட்டமாக்கப்பட்ட 3 வீடுகள் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை அதிகாலை விமான நிலையத்தை பரபரபாக்கிய பெண் ; ஆடைக்குள் காத்திருந்த ஷாக்

திருகோணமலையில் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை

திருகோணமலையில் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை

திருகோணமலை, ஜமாலியா மற்றும் சிறிமாபுர ஆகிய பகுதிகளில், கரையோரப் பாதுகாப்புச் சட்ட விதிகளுக்கு முரணாக நிர்மாணிக்கப்பட்டிருந்த மூன்று கட்டடங்கள்,நேற்று (12) கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் திணைக்களத்தினால் முற்றாக இடித்து அகற்றப்பட்டுள்ளன.

கட்டடங்களை இடித்து அகற்றுவதற்கான அறிவித்தல்கள் முறைப்படி, திணைக்களத்தால் கட்டட உரிமையாளர்களுக்கு எழுத்துமூலம் வழங்கப்பட்டிருந்தன. எனினும், உரிய தரப்பினர் அதனைப் பொருட்படுத்தவில்லை.

அவர்களுக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதிலும், அவர்களிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

இதனையடுத்து, திணைக்களத்தின் ஊடாகக் கட்டடங்களை இடித்து அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாகத் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட அலுவலக அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த அதிரடி நடவடிக்கை நாளையும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

அத்துடன், சட்ட விதிகளுக்கு முரணாக அமைந்துள்ள மேலும் 9 கட்டடங்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவையும் விரைவில் இடித்து அகற்றப்படவுள்ளன.” என அவர் எச்சரித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"