ஹெட்டிப்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அகரவத்த பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (10) இரவு நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் அப்பகுதியிலுள்ள தென்னந்தும்பு உற்பத்தி ஆலையொன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
அங்கு பணிபுரிந்த மற்றொரு ஊழியருடன் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், மரக்கட்டையால் தாக்கப்பட்டதில் அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் எட்டம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹெட்டிப்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக