BREAKING
சிறைத்தண்டனையை எதிர்த்து ஹிருணிக்கா பிரேமச்சந்திர மேன்முறையீடு நீதிமன்ற உத்தரவை மீறி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த பிக்குகள் ! அம்பாறை மருத்துவமனையில் அனாதராகவுள்ள 3 சடலங்கள் ; பொலிஸார் கோரிக்கை ஊழியருடன் தகராறு ; நபர் ஒருவர் அடித்துக் கொலை அநுராதபுர விபத்து; விரிவான விசாரணைக்கு உத்தரவு சிறைத்தண்டனையை எதிர்த்து ஹிருணிக்கா பிரேமச்சந்திர மேன்முறையீடு நீதிமன்ற உத்தரவை மீறி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த பிக்குகள் ! அம்பாறை மருத்துவமனையில் அனாதராகவுள்ள 3 சடலங்கள் ; பொலிஸார் கோரிக்கை ஊழியருடன் தகராறு ; நபர் ஒருவர் அடித்துக் கொலை அநுராதபுர விபத்து; விரிவான விசாரணைக்கு உத்தரவு

யாழில் தப்பியோடிய கைதி நஞ்சருந்தினார்

யாழில் தப்பியோடிய கைதி நஞ்சருந்தினார்

யாழ்ப்பாணத்தில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் இருந்து தப்பி சென்ற விளக்கமறியல் கைதி , நஞ்சருந்திய நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு , மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒருவர் வழக்கு விசாரணைக்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு சிறைக்காவலர்களால் அழைத்து வரப்பட்டுள்ளார்.

அதன் போது , நீதிமன்ற வளாகத்தில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் இருந்து தப்பி சென்றுள்ளார். தப்பி சென்றவரை   காங்கேசன்துறை பகுதியில் பொலிஸாரினால் மீள கைது செய்யப்பட்டார்.

பொலிஸார்  சுற்றிவளைத்து கைது செய்ய முற்பட்ட வேளை , தன் வசம் வைத்திருந்த நஞ்சு பாதார்த்ததை அவர் அருந்தியுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட பொலிசார் அவரை மீட்டு , தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் , அது தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கையிட்டனர் .

  வைத்தியசாலைக்கு சென்று கைதியை நேரில் பார்வையிட்ட நீதவான் , கைதியின் விளக்கமறியலை 20ஆம் திகதி வரையில் நீடித்தார் அந்நிலையில் குறித்த விளக்கமறியல் கைதி , சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"