BREAKING
மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல்

கெஹெலியவின் மில்லியன் மோசடி விவகாரம்: கோடிக்கணக்கான பணத்தை பதுக்கிய தொழிலதிபர் அதிரடி கைது!

கெஹெலியவின் மில்லியன் மோசடி விவகாரம்: கோடிக்கணக்கான பணத்தை பதுக்கிய தொழிலதிபர் அதிரடி கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான பாரிய நிதி மோசடி விசாரணைகளில் மற்றுமொரு முக்கிய நபர் சிக்கியுள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சராக இருந்த காலப்பகுதியில், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோத வழிகளில் ஈட்டியதாகக் கூறப்படும் சுமார் 748 மில்லியன் ரூபாய் தொடர்பான விசாரணைகளை கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீவிரப்படுத்தியுள்ளது.


இந்த மோசடி வலையமைப்பில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு தொழிலதிபர் நேற்று (29) கைது செய்யப்பட்டு கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குறித்த தொழிலதிபர், தனக்குச் சொந்தமில்லாத மற்றும் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட 30 மில்லியன் ரூபாய் பணத்தைத் தெரிந்தே தனது வசம் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (Money Laundering Act) முன்வைக்கப்பட்ட ஆதாரங்களைப் பரிசீலித்த நீதிவான், இந்த மோசடியின் பின்னணியைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் அவசியம் எனக் கருதி, சந்தேகநபரான தொழிலதிபரை வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.


தரமற்ற தடுப்பூசி கொள்முதல் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு, இந்த 748 மில்லியன் ரூபாய் பணமோசடி வழக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பணம் எவ்வாறு ஈட்டப்பட்டது மற்றும் யார் யாருக்கெல்லாம் கைமாறியது என்பது குறித்த இரகசியத் தகவல்களைப் பொலிஸார் திரட்டி வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"