யாழ்ப்பாணத்தில் போதை ஆசாமி ஒருவர் இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடமிருந்து ஒரு தொகை பணத்தை அபகரித்துள்ளார்.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
கல்வியங்காடு சந்தைக்கு அண்மித்த பகுதியில் உள்ள மதுபான சாலை வாசலில் நிறை போதையில் நின்ற நபர் , எதிரே உள்ள வங்கி ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வருவோரிடம் மிரட்டி பணம் பெற்று வந்துள்ளார்.
அதன்போது பணம் எடுத்து வந்த இளைஞன் ஒருவரிடமும் பணம் கேட்ட போது, இளைஞன் பணம் கொடுக்க மறுத்த போது, இளைஞனுடன் முரண்பட்டுள்ளார்.
இளைஞனும் தர்க்கப்பட்ட நிலையில், இருவருக்கும் இடையில் கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்போது இளைஞனை மூர்க்கத்தனமாக தாக்கிய போதையில் நின்ற நபர், இளைஞனிடம் இருந்து ஒரு தொகை பணத்தினையும் அபகரித்துள்ளார்.
குறித்த நபரின் இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு பல்வேறு தடவைகள் அறிவித்தும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக