BREAKING
இஸ்ரேலில் முடிவை நோக்கி நெதன்யாகுவின் ஆட்சி ; புதிய அரசாங்கத்தை அமைக்க காடி ஐசன்கோட்டிற்கு அழைப்பு இலங்கையில் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பட்டது தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் இருவர் சடலமாக மீட்பு ; நீராடச் சென்ற மேலும் இருவர் மாயம் விடுதி ஒன்றில் திடீர் சோதனை ; 32 சீன நாட்டவர்கள் செய்து வந்த சம்பவம் அம்பலம் தமிழர் பகுதியில் வயோதிபரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள் சாரதி இஸ்ரேலில் முடிவை நோக்கி நெதன்யாகுவின் ஆட்சி ; புதிய அரசாங்கத்தை அமைக்க காடி ஐசன்கோட்டிற்கு அழைப்பு இலங்கையில் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பட்டது தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் இருவர் சடலமாக மீட்பு ; நீராடச் சென்ற மேலும் இருவர் மாயம் விடுதி ஒன்றில் திடீர் சோதனை ; 32 சீன நாட்டவர்கள் செய்து வந்த சம்பவம் அம்பலம் தமிழர் பகுதியில் வயோதிபரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள் சாரதி

தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் இருவர் சடலமாக மீட்பு ; நீராடச் சென்ற மேலும் இருவர் மாயம்

தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் இருவர் சடலமாக மீட்பு ; நீராடச் சென்ற மேலும் இருவர் மாயம்

தெனியாய பகுதியில் உள்ள நீரோடையொன்றில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன நான்கு இளைஞர்களில் இருவரின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று (7) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காணாமல்போன ஏனைய இருவரையும் தேடும் பணிகளில் கடற்படையினரும் பொலிஸாரும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தெனியாய, பெவரலிய பகுதியில் அமைந்துள்ள கெலேதொல எனும் இடத்திற்கு நீராடச் சென்ற நான்கு இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தனர்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 7 இளைஞர்கள் அடங்கிய குழுவினர் சுற்றுலா சென்றிருந்த நிலையில், அவர்களுள் 6 பேர் குறித்த பகுதியில் நீராடச் சென்றுள்ளனர்.

அவர்களிலேயே நால்வர் நீரில் மூழ்கிக் காணாமல்போயிருந்தனர்.

காணாமல்போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காகக் கடற்படையினரும் பொலிஸாரும் நேற்று பிற்பகல் தொடங்கிய தேடுதல் நடவடிக்கைகள் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் போதே இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"