BREAKING
இலங்கை மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை ; காத்திருக்கும் கனமழை யாழில் மூன்று இளைஞர்கள் செய்த தகாத செயல் ; சுற்றித்திரிந்தவர்களுக்கு அதிகாரிகள் அதிரடி தமிழர் பகுதியை நள்ளிரவில் அதிர வைத்த துப்பாக்கிச்சூடு ; பிடிபட்ட முன்னாள் இராணுவ அதிகாரி இன்ஸ்டாவில் சமூகக் குரலாக ஒலித்த இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை சுக்கிரன் இந்த ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுதாம் ; உங்க ராசி என்ன இலங்கை மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை ; காத்திருக்கும் கனமழை யாழில் மூன்று இளைஞர்கள் செய்த தகாத செயல் ; சுற்றித்திரிந்தவர்களுக்கு அதிகாரிகள் அதிரடி தமிழர் பகுதியை நள்ளிரவில் அதிர வைத்த துப்பாக்கிச்சூடு ; பிடிபட்ட முன்னாள் இராணுவ அதிகாரி இன்ஸ்டாவில் சமூகக் குரலாக ஒலித்த இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை சுக்கிரன் இந்த ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுதாம் ; உங்க ராசி என்ன

இன்ஸ்டாவில் சமூகக் குரலாக ஒலித்த இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை

இன்ஸ்டாவில் சமூகக் குரலாக ஒலித்த இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை

பாபா குடி பகுதியைச் சேர்ந்த வனோபி என்ற இளம்பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளம்பெண் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகத் தனது கருத்துகளை வெளிப்படுத்தும் காணொளிகளைத் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று வனோபி வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவரது கணவர் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், இந்தக் கொலைக்கான காரணம் என்ன, இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இன்ஸ்டாகிராமில் சமூகப் பிரச்சினைகள் குறித்துப் பேசி வந்த இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், வனோபியைக் கொலை செய்தவர் யார் என்பதைக் கண்டறியும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"