BREAKING
விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை முதல் ஆரம்பம் தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம் தமிழர் பகுதியில் இராணுவ வீரருக்கு நேர்ந்த துயரம் யாழில் பலர் முன்னிலையில் இளைஞனுக்கு நேர்ந்த சம்பவம் ; போதை ஆசாமியால் விபரீதம் இஸ்ரேலில் முடிவை நோக்கி நெதன்யாகுவின் ஆட்சி ; புதிய அரசாங்கத்தை அமைக்க காடி ஐசன்கோட்டிற்கு அழைப்பு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை முதல் ஆரம்பம் தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம் தமிழர் பகுதியில் இராணுவ வீரருக்கு நேர்ந்த துயரம் யாழில் பலர் முன்னிலையில் இளைஞனுக்கு நேர்ந்த சம்பவம் ; போதை ஆசாமியால் விபரீதம் இஸ்ரேலில் முடிவை நோக்கி நெதன்யாகுவின் ஆட்சி ; புதிய அரசாங்கத்தை அமைக்க காடி ஐசன்கோட்டிற்கு அழைப்பு

இலங்கை வாழ் இந்து மக்களுக்கு அநுரவின் இனிய தீபாவளி வாழ்த்துகள்

இலங்கை வாழ் இந்து மக்களுக்கு அநுரவின் இனிய தீபாவளி வாழ்த்துகள்

ஜனாதிபதி வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிருஷ்ண பகவான் நரகாசுரன் எனும் அசுரனை வதம் செய்தமையை நினைவுகூர்ந்து, அதர்மத்தை வென்று தர்மம் நிலைநாட்டப்பட்டதைப் போன்று, அனைவரது மனங்களிலும் உள்ள இருள் அகன்று ஒளி பரவ வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்துக்கள் தீபாவளி சமயக் கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.

தீபாவளிப் பண்டிகையின் உண்மையான அர்த்தம் வீடுகளை விளக்குகளால் ஒளிரச் செய்வதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை.

மனித இதயங்களில் அன்பு, கருணை, சகோதரத்துவம் மற்றும் மனிதநேயப் பண்புகளின் ஒளியை ஏற்றி வைப்பதே அதன் உயரிய நோக்கமாகும்.

எனவே, வெறுப்பிற்குப் பதிலாக கருணையையும், பிளவுகளுக்குப் பதிலாக நல்லிணக்கத்தையும், அநீதிக்குப் பதிலாக நீதியையும் தேர்ந்தெடுத்து, சிறந்த, நியாயமான மற்றும் பரிவுமிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியைப் புதுப்பித்துக்கொள்ள தீபாவளி சிறந்த வாய்ப்பை வழங்குகின்றது.

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தி, அனைத்து சமய மற்றும் கலாசார அடையாளங்களையும் மதிக்கும், அனைவரையும் சமத்துவத்துடனும் கௌரவத்துடனும் நடத்தும் நாட்டைக் கட்டியெழுப்பும் உயரிய பொறுப்புடன் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மீண்டும் வலுப்பெற்று, உலகிற்கு முன்னால் கௌரவத்துடன் தலைநிமிர்ந்து நிற்கும் அமைதி மற்றும் மனிதநேயத்தின் நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான பயணம், இத்தீபாவளி நாளில் ஏற்றப்படும் தீபங்களின் ஒளியால் மேலும் பிரகாசிக்க வேண்டும் என்றும் அவர் பிரார்த்தித்துள்ளார்.

இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் இந்து மக்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் சௌபாக்கியம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"