2027 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் உழைக்கும் போது செலுத்தும் வரியை மேலும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (7) நடைபெற்று வரும் தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மெளும் கூறுகையில், எமது ஆட்சியின் ஊடாக ஒரு இலட்சம் ரூபாய் ஊதியம் பெறுவோருக்காக அறவிடப்பட்ட உழைக்கும் போது ஈட்டும் வரியை ஒரு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுவோருக்காக மாத்திரம் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம்.
அந்த மட்டத்தை எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் மேலும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக