BREAKING
தகவல் அறியும் சட்டத்தில் காதலி பற்றி 1,886 கேள்வி கேட்ட இளைஞர் ; அதிர்ந்து போன அதிகாரிகள்! தமிழர் பகுதியொன்றில் சோதனையில் சிக்கிய இளைஞன் ; அதிரடி காட்டிய அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம் மயிலத்தமடு மேய்ச்சல் தரைப் பகுதியில் இராணுவத்தினர் பயிற்சி! 22 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை தகவல் அறியும் சட்டத்தில் காதலி பற்றி 1,886 கேள்வி கேட்ட இளைஞர் ; அதிர்ந்து போன அதிகாரிகள்! தமிழர் பகுதியொன்றில் சோதனையில் சிக்கிய இளைஞன் ; அதிரடி காட்டிய அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம் மயிலத்தமடு மேய்ச்சல் தரைப் பகுதியில் இராணுவத்தினர் பயிற்சி! 22 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை

இந்தியா விசா விதிகளில் தளர்வு; இலங்கை ஏதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்!

இந்தியா விசா விதிகளில் தளர்வு; இலங்கை ஏதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்!

இந்திய அரசு வெளிநாட்டினருக்கான புதிய கடவுச்சீட்டு (Passport) மற்றும் விசா விதிகளில் திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கும் இதனூடாக தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.​

மத்திய உள்துறை அமைச்சகத்தால் நவம்பர் 5-ஆம் தேதி வெளியிடப்பட்ட "குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) (திருத்த) ஆணை, 2026"-ன் (Immigration and Foreigners (Exemption) (Amendment) Order, 2026) ஒரு பகுதியாகவே இந்தப் புதுப்பிக்கப்பட்ட விதிகள் அமைந்துள்ளன.​

வெளிநாட்டினருக்கான விசா விதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறிப்பிட்ட பாகிஸ்தான் குடிமக்கள், மற்றும் இலங்கைத் தமிழர்கள், திபெத்தியர்கள், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மை அகதிகள் உள்ளிட்டோருக்குப் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 9, 2015 அல்லது அதற்கு முன்னர் இந்தியாவில் அகதிகளாகப் பதிவு செய்த இலங்கைத் தமிழ் குடிமக்களுக்கு, வழக்கமான கடவுச்சீட்டு (Passport) மற்றும் விசா (Visa) தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

 அத்துடன்  1959 முதல் மே 30, 2003 வரையிலான காலத்தில் காட்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அனுமதியுடன் இந்தியாவிற்குள் நுழைந்த திபெத்தியர்களுக்கு விசா விதிவிலக்குகள் பொருந்தும்.

அத்தேதிக்குப் பிறகு இந்தியா-நேபாள எல்லையில் உள்ள குறிப்பிட்ட குடியேற்றச் சாவடிகள் வழியாகச் சிறப்பு நுழைவு அனுமதிச் சீட்டுகள் (Special Entry Permits) பெற்று வந்தவர்களுக்கும் இந்தத் தளர்வு பொருந்தும்.

மேலும்  பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மை அகதிகள் மற்றும் குறிப்பிட்ட பாகிஸ்தான் குடிமக்களுக்கும் இத்தளர்வுகள் பொருந்தும். நேபாள மற்றும் பூடான் குடிமக்களுக்குத் தனியாகப் பயணத் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

தங்கள் பயண ஆவணங்களைப் புதுப்பிக்க முடியாதவர்களுக்கும், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் மட்டுமே இந்த நிவாரணம் பொருந்தும்.

இந்த விலக்குகள் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குட்பட்டவை. இந்தியாவில் தங்கள் தங்குதலைத் தொடர விரும்பும் குறிப்பிட்ட பிரிவினர் இன்னமும் தொடர்புடைய விசாவைப் பெறுவது கட்டாயமாகும் என்றும்  இந்திய  ஊடகங்கள்  குறிப்பிட்டுள்ளன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"