BREAKING
இந்தியா விசா விதிகளில் தளர்வு; இலங்கை ஏதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்! யுத்தத்தில் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர தடையில்லை; பொது பாதுகாப்பு அமைச்சர் தீபாவளி தினத்தை முன்னிட்டு சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் சிக்கிய நபர் ; நீண்ட காலம் நடந்த தகாத செயல் அம்பலம் கிழக்கு மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விடுமுறை ; ஏனைய பாடசாலைக்கு முக்கிய தகவல் இந்தியா விசா விதிகளில் தளர்வு; இலங்கை ஏதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்! யுத்தத்தில் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர தடையில்லை; பொது பாதுகாப்பு அமைச்சர் தீபாவளி தினத்தை முன்னிட்டு சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் சிக்கிய நபர் ; நீண்ட காலம் நடந்த தகாத செயல் அம்பலம் கிழக்கு மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விடுமுறை ; ஏனைய பாடசாலைக்கு முக்கிய தகவல்

விபத்தில் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு; பிறந்த நாளில் துயரம்

விபத்தில் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு; பிறந்த நாளில் துயரம்

மின்னேரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலன்னறுவை வைத்தியசாலையில் பணியாற்றிய 50 வயதுடைய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் தகவலின்படி, பொலன்னறுவை – ஹபரணை வீதியின் 39ஆவது மைல்கல் அருகே வெள்ளிக்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மின்னேரியாவிலிருந்து ஹபரணை நோக்கிப் பயணித்த கார், எதிர்த்திசையில் வந்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் இரு வாகனங்களினதும் சாரதிகள் காயமடைந்த நிலையில், ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, காரைச் செலுத்திய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பொலன்னறுவை புதிய நகரப் பகுதியில் வசித்து வந்த விசேட சத்திர சிகிச்சை நிபுணர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். டிப்பர் லொறியின் சாரதி மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  

நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அவர், மாத்தளை மருத்துவமனை ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகப் பொலன்னறுவையிலிருந்து மாத்தளை நோக்கித் தனியாக காரில் பயணித்தபோதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மருத்துவமனைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அவர், அண்மையில் பொலன்னறுவை மாவட்ட பொது மருத்துவமனைக்கு இடமாற்றம் பெற்றிருந்தார்.

அறுவை சிகிச்சைத் துறையில் சிறந்து விளங்கிய அவர், நோயாளிகளின் உயிரைக் காப்பதற்காகத் தனது வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்த அர்ப்பணிப்புமிக்க மருத்துவராகத் திகழ்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"