BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

சவூதியில் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து வெளியான தகவல் ; நிறுத்தப்பட்ட விமான சேவைகள்

சவூதியில் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து வெளியான தகவல் ; நிறுத்தப்பட்ட விமான சேவைகள்

சவூதி அரேபியாவில் பொதுமக்கள் உட்கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்கு பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் உம்ரா யாத்திரிகர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களில் அண்மைய சம்பவங்களால் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், அங்கு நிலவும் பாதுகாப்புச் சூழல் காரணமாக, இலங்கைப் பணியாளர்கள் மற்றும் யாத்திரிகர்களின் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பிராந்தியப் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு, கொழும்பு – ரியாத் மற்றும் கொழும்பு – தம்மாம் இடையிலான அனைத்து நேரடி விமான சேவைகளையும் நவம்பர் 1ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், சவூதி அரேபியாவுக்குச் செல்லத் திட்டமிடும் உம்ரா யாத்திரிகர்கள் மற்றும் பயண ஏற்பாட்டாளர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை ஹஜ் குழு அறிவுறுத்தியுள்ளது.

வானூர்தி பயணங்களில் இடையூறுகள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதால், யாத்திரிகர்களின் பாதுகாப்பையும் அவசரகாலத் திரும்பும் பயண ஏற்பாடுகளையும் உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"