BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கொழும்பில் இருந்து சென்ற பேருந்து கோர விபத்து; இருவர் பலி; பலர் காயம்

கொழும்பில் இருந்து சென்ற பேருந்து கோர விபத்து; இருவர் பலி; பலர் காயம்

    கொழும்பில் இருந்து சென்ற பேருந்து புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ 19ஆவது மைல்கல் பகுதியில் கோர விபத்தில் சிக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (22) மாலைஇடம்பெற்ற கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக மன்னார் நோக்கிப் பயணித்த அதி சொகுசு பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியோரத்தில் இருந்த பாலத்தில் மோதி, வீதியை விட்டு விலகிச் சென்று சுமார் 200 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு, அதி உயர் அழுத்த மின் கம்பத்துடன் மோதி கவிழ்ந்துள்ளது.

விபத்து நடந்த சமயத்தில் பேருந்தில் சுமார் 50 பயணிகள் பயணித்துள்ளனர். விபத்தையடுத்து சாலியவெவ பொலிஸாரும் அப்பகுதி மக்களும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைகளில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும், பேருந்தில் பயணித்த பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், படுகாயமடைந்த பேருந்தின் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேருந்து மோதியதில் அதி உயர் அழுத்த மின் கம்பம் பலத்த சேதமடைந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டது. இன்னிலையில் விபத்து சம்பவம் தொடர்பில் சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.    

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"