BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இந்தியாவில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் இளைஞனுக்கு நேர்ந்த துயரம் ; பறிபோன உயிர்

இந்தியாவில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் இளைஞனுக்கு நேர்ந்த துயரம் ; பறிபோன உயிர்

தூத்துக்குடி மாவட்டம், தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் பெய்த மழையின் போது மின்னல் தாக்கியதில் ஒருவர் பலியானார்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இங்கு புதூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த முனியசாமி (வயது 24) மற்றும் பலர் கொத்தனார் வேலை பார்த்து வருகின்றனர். வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு இவர்கள் அனைவரும் முகாமைச் சேர்ந்த ஓலைக்குடிசையில் படுத்துத் தூங்கியுள்ளனர்.

அப்போது இரவு 10 மணியளவில் அப்பகுதியில் பெய்த பலத்த மழையின் போது திடீரென மின்னல் தாக்கியுள்ளது. இந்த மின்னல் அவர்கள் தங்கியிருந்த குடிசையின் மீது விழுந்ததில், உள்ளே தூங்கிக் கொண்டிருந்த முனியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருக்கு வயிறு, வலது விலா எலும்பு மற்றும் வலது தொடையில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த இடி விபத்தில், உடன் தூங்கிக் கொண்டிருந்த  2 பேர் காயம் அடைந்தனர்.

பாதிக்கப்பட்ட 2 பேரும் தற்போது இயல்பான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"