BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் கானை அக்டோபர் 28 ஆம் திகதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு மும்பை பொலிஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளமை பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட் நடிகர் அமீர்கானின் உறவினரான இம்ரான் கான், அமெரிக்க குடியுரிமை பெற்றவர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் ஓசிஐ கார்டு இவர் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இம்ரான் கான் கடந்த 10 ஆம் திகதி மும்பையில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்றார். ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு அனுமதி பெறப்படவில்லை என்று கூறிய பொலிஸார், அங்கு திரண்டவர்களைத் தடுத்து நிறுத்தினர். நடிகர் இம்ரான் கான் உள்பட நூற்றுக்கணக்கானோர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கிரித் சோமையா மும்பை பொலிஸாரிடம் புகார் அளித்தார்.

அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள இம்ரான் கான், இந்தியாவில் அரசியல் போராட்டத்தில் பங்கேற்கலாமா? அவரது ஓசிஐ அட்டை தொடர்பான விதிகள் மற்றும் குடியேற்ற விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்துக்கு விவகாரம் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, இம்ரான் கானை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி, அக்டோபர் 28 ஆம் திகதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இம்ரான் கானுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.     

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"