BREAKING
மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல்

டித்வா சூறாவளி ஏற்படுத்திய நிலச்சரிவு இரண்டு மாதங்களுக்கு பிறகு காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு

டித்வா சூறாவளி ஏற்படுத்திய நிலச்சரிவு இரண்டு மாதங்களுக்கு பிறகு காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல்போன இளைஞன் ஒருவரின் சடலம், இரண்டு மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கெப்பெட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெப்பெட்டிபொல – கவரம்மன பகுதியில் வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் விழுந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் குழுவினால் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், உயிரிழந்தவர் மீராவத்த, வெரலவத்த பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆர். எம். அசித கோசலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 27 ஆம் திகதி டித்வா சூறாவளியின் தாக்கத்தால் கவரம்மன பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது, மண் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் மீண்டும் ஏற்பட்ட மண் சரிவில் அவர் மண்ணுக்குள் புதையுண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் நிலவிய கடும் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, போக்குவரத்துக்கு அவசியமான அளவிற்கு மட்டுமே மண் அகற்றப்பட்டதுடன், காணாமல்போன இளைஞனின் உடலை மீட்க முடியாமல் போனது.

தற்போது வானிலை நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து, கெப்பெட்டிபொல பகுதியில் வீதியில் விழுந்த மண்ணை முழுமையாக அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் போது, காணாமல்போன இளைஞனின் சடலம் என சந்தேகிக்கப்படும் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கெப்பெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சட்ட நடவடிக்கைகளுக்காக சடலம் நீதிமன்ற உத்தரவின் கீழ் மேலதிக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"