BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நாட்டிற்கு நாட்களில் லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

நாட்டிற்கு நாட்களில் லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்த மாதத்தின் முதல் 25 நாட்களில் இலங்கைக்கு மொத்தமாக 2,23,645 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகார சபை வெளியிட்டுள்ள தகவலின் படி, குறித்த காலப்பகுதியில் ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவு செய்யப்பட்ட நாள் ஜனவரி 15 ஆகும். அந்த நாளில் மட்டும் 10,483 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த 25 நாட்களுக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து 41,603 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து 22,876 பேர், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 23,329 பேர் மற்றும் ஜெர்மனியிலிருந்து 14,431 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் சுற்றுலாத் துறைக்கு இது ஒரு சாதகமான முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"