BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

சம்மாந்துறையில் காணாமல் போன எருமைகளில் மீட்பு ; இருவர் கைது

சம்மாந்துறையில் காணாமல் போன எருமைகளில் மீட்பு ; இருவர் கைது

சம்மாந்துறை பகுதியில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட 12 எருமை மாடுகளில் 7 மாடுகள் மருதமுனை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான குறித்த 12 எருமை மாடுகளும் கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி காணாமல் போனதாக சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது, காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட எருமை மாடுகள் மருதமுனை பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார், 7 எருமை மாடுகளை மீட்டதுடன், 42 வயதுடைய மருதமுனை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் மீட்கப்பட்ட எருமை மாடுகள் உள்ளிட்ட சான்றுப் பொருட்களையும் திங்கட்கிழமை (05) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரையின் பேரிலும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"