கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியின் விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து நேற்று (02.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ9 வீதியூடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது, கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாக பயணித்ததாக கூறப்படும் மகிழுந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுநர் உடனடியாக மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக