மாவனல்லை - கடோல் பாலம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரணாயக்கவில் இருந்து மாவனல்லை நோக்கிப் பயணித்த சிறிய ரக வான் ஒன்றும், மாவனல்லையில் இருந்து உஸ்ஸாபிட்டிய நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்றும் கடோல் பாலத்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மாவனல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (31) நண்பகல் அளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது வானில் பயணித்த நால்வரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனைய மூவரும் சாதாரண காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக