BREAKING
மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல்

மட்டக்களப்பில் போதைப் பொருள் வியாபாரிகள் இருவர் கைது கிராம் ஜஸ் போதைப்பொருள் பறிமுதல்

மட்டக்களப்பில் போதைப் பொருள் வியாபாரிகள் இருவர் கைது கிராம் ஜஸ் போதைப்பொருள் பறிமுதல்

ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (23.01.2026) மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,

பொலிஸார் நேற்று இரவு மாறுவேடத்தில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது,

ஒரு குழு ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலும்,

மற்றொரு குழு காத்தான்குடி பகுதியிலும் ஒரே நேரத்தில் வீதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் போது,

காத்தான்குடி எப்.சி. வீதியில் போதைப்பொருள் வியாபாரத்திற்காக எடுத்துச் சென்ற நிலையில்,

26 வயதுடைய வியாபாரி ஒருவர்

10 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை,

ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள வீதியில்,

அப்பகுதியில் உள்ள “ஈஸ்ரன் ரெய்லர் செப்” எனப்படும் ஆடைகள் தைக்கும் கடையின் உரிமையாளரான வியாபாரி ஒருவர்

110 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும்

பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை செய்வதற்கான நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்,

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"