BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி வயல் நிலங்களில் அதிகரிக்கும் சட்டவிரோத மணல் அகழ்வு - விவசாயிகள் கடும் கவலை

கிளிநொச்சி வயல் நிலங்களில் அதிகரிக்கும் சட்டவிரோத மணல் அகழ்வு - விவசாயிகள் கடும் கவலை

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கமநல சேவை நிலையப் பகுதிகளில், நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எந்தவித அனுமதியும் இன்றி இரவு வேளைகளில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக காணி உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் காரணமாக எதிர்வரும் பெரும் போக நெற்செய்கையில் விவசாயிகள் பாரிய பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களும் அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, சட்டவிரோத மணல் அகழ்வை முற்றாகத் தடுத்து நிறுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"