BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் முக்கிய அரசு நிறுவனங்கள் மீது சீன ஹேக்கிங் தாக்குதல் - இணையக் கட்டுப்பாட்டு தளங்களை முடக்கிய அமெரிக்கா

அமெரிக்காவின் முக்கிய அரசு நிறுவனங்கள் மீது சீன ஹேக்கிங் தாக்குதல் - இணையக் கட்டுப்பாட்டு தளங்களை முடக்கிய அமெரிக்கா

அமெரிக்க நீதித் துறை, நாசா, ஃபெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் அமெரிக்க செனட் சபை உள்ளிட்ட முக்கிய அரசு நிறுவனங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சீன ஹேக்கிங் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடக்கியுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

இந்த இணைய ஊடுருவலால் அமெரிக்க நீதித் துறை, சக்திவளத் துறை, சுகாதாரத் துறை, தேசிய சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல அரசு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த நான்கு தனியார் நிறுவனங்களும் இந்த சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஹேக்கிங் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘க்யூஸ்கேன்’ மற்றும் ‘க்யூடிரூட்டர்’ ஆகிய இணையக் கட்டுப்பாட்டு தளங்களின் டொமைன்களை அமெரிக்க நீதித் துறை கைப்பற்றி, அவற்றை செயலிழக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது 2018ஆம் ஆண்டு முதல் உலகளாவிய ரீதியில் இந்த இணைய ஊடுருவல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், குறித்த ஹேக்கிங் தளங்களை சீனாவைச் சேர்ந்த ‘நாஞ்சிங் சின்ஜியூவே நெட்வொர்க் டெக்னாலஜி’ நிறுவனம் இயக்கி வந்ததாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், சீனாவின் உளவு அமைப்புகள் மற்றும் மக்கள் விடுதலை இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக இருந்ததாகவும் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அரசு அமைப்புகளின் சார்பில் இதுபோன்ற நவீன இணைய ஊடுருவல் நடவடிக்கைகளை தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் முன்னெடுக்கப்படுவதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் உடனடி பதில் எதனையும் வெளியிடவில்லை. அதேவேளை, சைபர் தாக்குதல்களில் சீன அரசுக்கு தொடர்பு இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை சீனா தொடர்ச்சியாக மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"