BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நல்லூர் ஆலயத்திற்குள் சொகுசு வாகனம்; பக்தர்கள் மத்தியில் கடும் சர்ச்சை

நல்லூர் ஆலயத்திற்குள் சொகுசு வாகனம்; பக்தர்கள் மத்தியில் கடும் சர்ச்சை

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ காலத்தில், ஆலய வளாகத்திற்குள் சொகுசு வாகனம் ஒன்று நுழைந்த சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் பல்வேறு கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.

மஹோற்சவத்தை முன்னிட்டு நல்லூர் ஆலயத்தைச் சுற்றியுள்ள பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அவசரத் தேவைகளுக்கான அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களைத் தவிர, ஏனைய வாகனங்களின் நுழைவுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கறுப்பு நிற சொகுசு ஜீப் ரக வாகனம் ஒன்று ஆலயத்தின் உட்பகுதி வரை சென்று நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் தங்களது வாகனங்களை தூர இடங்களில் நிறுத்திவிட்டு ஆலயத்திற்கு நடந்துசெல்லும் நிலையில், குறித்த சொகுசு வாகனத்திற்கு மட்டும் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மேலும், அந்த வாகனம் உரிய அனுமதியுடன் ஆலய வளாகத்திற்குள் நுழைந்ததா அல்லது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் கவனக்குறைவால் நுழைந்ததா என்பது தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மஹோற்சவ காலத்தில் ஆலயத்தின் புனிதத்தையும், பக்தர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளையும் கருத்தில் கொண்டு, சொகுசு வாகனம் ஆலய வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டது தொடர்பில் உரிய அதிகாரிகள் தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"