BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஹங்கேரியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து: பேர் உயிரிழப்பு

ஹங்கேரியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து: பேர் உயிரிழப்பு

ஹங்கேரியின் கிழக்குப் பகுதியில் உள்ள M3 அதிவேக நெடுஞ்சாலையில் போலந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

செர்பியாவில் இருந்து போலந்து நோக்கிப் பயணித்த குறித்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பேருந்தில் 57 பயணிகளும் இரண்டு சாரதிகளும் பயணித்ததாக ஹங்கேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற இடத்திலேயே 11 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மேலும் 10 பேர் கடுமையாகக் காயமடைந்துள்ளதுடன், 37 பேர் இலேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதி உறங்கியமையினால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் ஹங்கேரி பிரதமர் பீட்டர் மக்யார், போலந்து ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கி மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"