BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஜனாதிபதி அநுரவின் புதிய அதிரடி அறிவிப்பு; ஊழல் குற்றச்சாட்டில் உண்மைகளை வெளிப்படுத்துவோருக்கு சட்ட ரீதியான சலுகை

ஜனாதிபதி அநுரவின் புதிய அதிரடி அறிவிப்பு; ஊழல் குற்றச்சாட்டில் உண்மைகளை வெளிப்படுத்துவோருக்கு சட்ட ரீதியான சலுகை

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர்கள், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடராமல் இருப்பதற்கோ அல்லது ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளை மீளப் பெறுவதற்கோ அதிகாரம் வழங்கும் வகையில் புதிய சட்டத் திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கமைய வெளியிடப்பட்டுள்ள சட்டமூலத்தில் இந்த புதிய ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களின் மூலம், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளன.

இதுவரை மேல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை மீளப் பெறுவதற்கான அதிகாரம் காணப்பட்ட நிலையில், புதிய திருத்தங்களின் மூலம் நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளையும் மீளப் பெறுவதற்கான அதிகாரம் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்படவுள்ளது.

அத்துடன், ஊழல் நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட அல்லது வேறு வழிகளில் மாற்றப்பட்ட சொத்துகளின் மதிப்பை அறவிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

மேலும், ஊழல் நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட பதவிகள், சலுகைகள், நன்மைகள் அல்லது ஏனைய இலாபங்கள் தொடர்புடைய நபர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படும் நாளிலிருந்து சட்டவிரோதமானவையாக கருதுவதற்கும் புதிய திருத்தங்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, மாகாண அரச சேவையின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை நிரந்தர அல்லது தற்காலிக அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் இணைத்துக்கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகளும் முன்மொழியப்பட்டுள்ளன.

இந்த சட்டத் திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால், ஊழல் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தும் நபர்களை ஊக்குவிப்பதுடன், ஊழல் மூலம் பெறப்பட்ட சொத்துகள் மற்றும் சலுகைகளை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைகளுக்கும் வலுவான அடித்தளம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"