BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்; வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்; வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படம் வெளியாகி 13 நாட்களை கடந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை செய்துள்ள வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளதுடன், மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதையடுத்து பல்வேறு தடைகளை கடந்து ஜூலை 23ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வசூல் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், 13 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ.132.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்குமா, தமிழ்நாட்டில் புதிய வசூல் சாதனைகளை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"