யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய நிர்மாணப் பணிகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு, யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆலயத்தின் மூலஸ்தானம், கோபுரம் மற்றும் தேர்முட்டி ஆகியவற்றைத் தவிர்ந்த ஏனைய கட்டடங்கள் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், உரிய கட்டட அனுமதியின்றி ஆலயக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுவதாகக் கூறி, அவற்றை இடித்து அகற்றுமாறு கோரி முன்னாள் யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் சார்பில் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,
இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த யாழ்ப்பாண மேல் நீதிமன்றம், அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஆலயக் கட்டடங்களை அகற்றுமாறு கோரிய மனு தொடர்பான கட்டளையை ஜூலை 30ஆம் திகதி வழங்க தீர்மானித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக