BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்ற கணவரும் மைத்துனரும் விபத்தில் உயிரிழப்பு

மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்ற கணவரும் மைத்துனரும் விபத்தில் உயிரிழப்பு

பதுளை மாவட்டத்தின் மகியங்கனை – பதியதலாவ பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24ஆம் திகதி முற்பகல் 10.00 மணியளவில் தம்பான 54ஆம் மைல்கல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக மகியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, மோட்டார் சைக்கிளை செலுத்தியவருக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதியுள்ளது.

இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்திய 31 வயதுடைய திருமணமான ஒருவரும், பின்னால் பயணித்த அவரது மனைவியின் 23 வயதுடைய சகோதரரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவரின் மனைவி ஒலுவில் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்பதுடன், பல்கலைக்கழகத்தில் 25ஆம் திகதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகவே இருவரும் பயணித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரு உயிரிழப்புகள் தொடர்பான மரண விசாரணைகள் மகியங்கனை நகர திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் மகியங்கனை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மகியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"