BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலைஹபரணை வீதியில் பயங்கர விபத்து; கார் மீது மோதி தீப்பற்றி எரிந்த ரேசிங் மோட்டார் சைக்கிள் இளைஞர் உயிரிழப்பு

திருகோணமலைஹபரணை வீதியில் பயங்கர விபத்து; கார் மீது மோதி தீப்பற்றி எரிந்த ரேசிங் மோட்டார் சைக்கிள் இளைஞர் உயிரிழப்பு

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் கித்துலூத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து ஹபரணை நோக்கி இந்திய தம்பதியினர் பயணித்த கார் ஒன்றும், ஹபரணையிலிருந்து கந்தளாய் நோக்கி அதிவேகமாக பயணித்த உயர் ரக ரேசிங் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மோதலின் தாக்கம் காரணமாக மோட்டார் சைக்கிள் பல துண்டுகளாகச் சிதறியதுடன், சில நொடிகளிலேயே தீப்பற்றி எரிந்து முற்றிலும் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 27 வயதுடைய இளைஞர், உடனடியாக கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக தீவிர சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, காரில் பயணித்த இளைஞரின் மனைவி லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர், அவர் தங்கியிருந்த விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்திற்கான முதன்மை காரணம், வாகனங்களின் வேகம் மற்றும் விபத்து தொடர்பான ஏனைய காரணிகள் குறித்து கல்லோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"