BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க புதிய நடவடிக்கை; பழைய கச்சேரி கட்டடம், மந்திரிமனை உள்ளிட்ட முக்கிய இடங்கள் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க புதிய நடவடிக்கை; பழைய கச்சேரி கட்டடம், மந்திரிமனை உள்ளிட்ட முக்கிய இடங்கள் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கியமான வரலாற்று மற்றும் கலாசாரப் பாரம்பரியச் சின்னங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள பழைய கச்சேரி கட்டடத்தை பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்தக் கட்டடம் யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய வரலாற்று சொத்துகளில் ஒன்றாக இருப்பதாக குறிப்பிட்டார்.

பழைய கச்சேரி கட்டடத்தை விரைவாகப் பாதுகாப்பதுடன், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதன் வரலாற்று மற்றும் கட்டடக்கலை முக்கியத்துவத்தைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனுடன், யாழ்ப்பாணக் கோட்டை, மந்திரிமனை மற்றும் சங்கிலியன் தோரண வாயில் அமைந்துள்ள வளாகம் உள்ளிட்ட முக்கிய வரலாற்று இடங்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் வரலாறு, கட்டடக்கலை மற்றும் கலாசார மரபுடன் நெருங்கிய தொடர்புடைய இந்த இடங்கள், எதிர்கால தலைமுறைகளுக்கும் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான பாரம்பரியச் சொத்துகளாகக் கருதப்படுகின்றன.

இதற்காக நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"