BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்: வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்

சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்: வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதாகக் கூறி, அவ்வாறான நடவடிக்கைகளை தவிர்க்குமாறு வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் பா. பாலேந்திரன் ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், தாம் பதவிக்கு வந்தது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தவிர சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக அல்ல என்று தெரிவித்தார்.

பிரதேச சபைக்காக கோரப்பட்ட வாகனம் தொடர்பில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், சபையின் நிர்வாகப் பணிகளுக்குத் தேவையான வாகனமே கோரப்பட்டதன்றி, தனிப்பட்ட பயன்பாட்டிற்கான சொகுசு வாகனம் எதுவும் கோரப்படவில்லை என்றார்.

ஊடகங்கள் சுயாதீனமாகவும் நடுநிலையாகவும் செயல்பட்டு, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆதாரமற்ற தகவல்களை வெளியிடுவதன் மூலம் மக்களிடையே தவறான எண்ணங்கள் உருவாகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாம் பதவியேற்கும் முன்னரே சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்ததாகக் குறிப்பிட்ட அவர், தனது சொந்த காணியில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் முன்பள்ளி ஒன்றை நிர்மாணித்து வருவதாகவும், அது விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பிரதேச சபையின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த காலத்தில் 86 மில்லியன் ரூபாயாக இருந்த வருவாயை 2026 ஆம் ஆண்டில் 113 மில்லியன் ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பிரதேச சபையில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், அது தனிநபர் ஒருவரால் செய்யப்பட்ட முறைப்பாடு மட்டுமே என்றும், சபையின் செயற்பாடுகளை பாதிக்கும் நோக்கத்திலேயே அவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கல்குவாரி அனுமதிகள் மற்றும் அவற்றின் வருவாய் தொடர்பிலும் அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்திற்கும் நடைமுறைகளுக்கும் அமைவாக முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அந்த வருவாயின் ஊடாக வீதி புனரமைப்பு உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக, தனிப்பட்ட குறைகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் நேரடியாக தம்முடன் கலந்துரையாடுமாறும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் தவிசாளர் பா. பாலேந்திரன் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"